வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதாவது AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விற்பனை முனைய சாதனத்தில் கைரேகை மூலம் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த பணி நியாவிலைக் கடையில் ரேஷன் கடை பணியாளர்களால் செய்து வரப்பட்டது. தற்போது இந்த விதிமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள ஒரு மாற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்பதும் கைரேகை பதிவு செய்யாவிட்டால், அவர்களால் ரேஷனில் பொருட்கள் பெற இயலாது என்பதும் விதிமுறை. மட்டுமல்லாமல் யாருடைய கைரேகை உள்ளதோ அவர்கள் மட்டுமே ரேஷன் கார்டுடன் வந்து பொருட்களை பெற முடியும் என்கிற நிலை உள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் வெளி மாவட்டங்களில் பணியின் காரணமாக தங்கியிருந்தால் அங்கிருக்கும் ரேஷன்கடைக்கு சென்று கைரேகை மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். இதனிடையே மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று கைரேகை பதிவு செய்யும் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படியில் ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்து வருவதாக தகவல்கள் சொல்கின்றன.