கர்நாடக மாநிலம் முதனூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி, தனது பருத்தி வயலின் நடுவில் நடிகை சன்னி லியோனின் பெரிய போஸ்டரை ஒட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது பருத்தி பயிரை தீய பார்வை மற்றும் பொறாமையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த செயலை விவசாயி செய்துள்ளார்.
சன்னிலியோனின் ரசிகர்கள் மட்டுமன்றி உள்ளூர்வாசிகளும் ஆர்வத்துடன் வயலுக்கு வந்து பார்க்கின்றனர். இந்த போஸ்டர் தனது பயிர் மீது பொறாமைப்படு பவர்களின் பார்வையை குறைக்கும் என்றும், அதிக மதிப்புள்ள பயிரை பாதுகாக்க உதவும் என்றும் விவசாயி நம்புவதாக கூறப்படுகிறது. விவசாயியின் இந்த நூதன முறையை கிராம மக்கள் மத்தியில் ஆச்சரியமாக மாறியுள்ளது.
