தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய அவர் கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவை வழிநடத்தினார்.
இவரது திறமையால் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்த பதவிக்கு வந்து தற்போது அவர் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீசுவரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார்.