அண்மையில், சென்னையில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மகேஸ்வரி ஐபிஎஸ், நடிகை சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுஹாசினி, தனக்கு 55 வயதாகும் போது நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை பற்றி பேசினார்.
அப்போது பிசியாக ஒரு ப்ராஜெக்ட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், தினம் தினம் தனது செல்போனுக்கு கை கால்களை நடுங்க செய்யுமளவிற்கு மோசமான புகைப்படம் வரும் என கூறியுள்ளார்.
இந்த வேதனையை தான் மூன்று மாதம் வரை அனுபவித்த பிறகே கமிஷனரை உதவிக்காக அணுகியதாகவும், முன்னமே ஏன் இது பற்றிக் கூறவில்லை என அவர் கேட்டதாகவும் தெரிவித்தார்.
தன்னுடைய வயது, அனுபவம் கொண்ட ஒரு பெண்ணுக்கே இத்தனை தயக்கம் இருந்தால் இளம்பெண்கள் எத்தனை பயத்திற்குரிய சூழலை எதிர்கொள்வார்கள் எனவும், இது போன்ற சூழ்நிலைகளில் சமுதாயம் பாதிக்கப்பட்ட பெண்களையே குறை சொல்லும் என்றும் சுஹாசினி கருத்து தெரிவித்தார்.
மேலும், தனது கணவர் மணிரத்னத்துக்கும் மொபைலில் மின் கட்டணம் தொடர்பான போலியான மெசேஜ் சமீபத்தில் வந்ததாகவும், அதை கிளிக் செய்யாததால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்ததாகவும் பகிர்ந்துள்ளார்.