சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பைடன் கூடிய விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இந்நிலையில், காரைக்குடி தொகுதியில் இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
