Thursday, February 5, 2026

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு

லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது.

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

புறப்பட்ட 37 நிமிடத்தில் மீண்டும் லண்டனில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது.

லண்டன், சென்னை இடையே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Related News

Latest News