Wednesday, December 17, 2025

கோவை சாலையில் திடீர் பள்ளம்., சிக்கிக் கொண்ட லாரி., அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கோவையில் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், பல்வேறு இடங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சிக்கிக் கொண்டு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் மணியக்காரன் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலையில் சென்ற லாரி அங்கு திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அப்பொழுது அப்பகுதியில் எந்த வாகனமும் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் அந்த சாலை நீண்ட தூரம் பிளவு ஏற்பட்டு உள்ளது. தற்பொழுது போடப்பட்ட புதிய சாலை திடீரென பள்ளம் ஏற்பட்டு லாரி சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சம் அடைந்து உள்ளனர்.

Related News

Latest News