தமிழ்நாடு முழுவதுமே பலர் தங்களுக்கு இந்த மாதமும் கடந்த மாதமும் மின் கட்டண விகிதம் கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறிவருகிறார்கள். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகையில், கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூறுவதுபோல் மின்சார கட்டணம் உயரவில்லை. ஆனால் பல இடங்களில் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடக்கவில்லை, பிரச்சினை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. காலம் கடந்து மின்சார கணக்கீடு செய்யும்போது மின்சார கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளனர்.
