சென்னையில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக ஒவ்வொரு விமானமும் தரையிறங்குவதில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.