டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார். SpaceX போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் இவர், ட்விட்டரையும் வாங்கி, அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்.
எலான் மஸ்க் நிறுவனங்களில் பணிக்குச் சேர வேண்டுமெனில், கடுமையான இன்டர்வியூவ்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், SpaceX நிறுவனத்தில் 14 வயது சிறுவன் ஒருவருக்கு எலான் மஸ்க் வேலை வழங்கி அசத்தியிருப்பது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் கைரான் குவாசி. 14 வயது சிறுவனான குவாசி, தன்னுடைய 11வது வயதில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிக்கத் தொடங்கி, தற்போது சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற உள்ளார்.
இந்த நிலையில்,SpaceX நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்ற குவாசிக்கு, அந்நிறுவனம் மிக முக்கிய வேலை ஒன்றை வழங்க உள்ளது.அதில் சிறுவனான குவாசி, எலான் மஸ்கின் மனதையே தொட்டிருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.சிறு வயதிலேயே எலான் மஸ்க் நிறுவனத்தில் குவாசி இணைந்திருப்பதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.