எதற்காக இப்படிப் பதுங்குகிறது இந்த பெகாசஸ்?
யாரும் விரட்டி வருகிறார்களா?
யாரும் உளவு பார்க்கிறார்களா?
யாரும் அச்சுறுத்துகிறார்களா?
எதைக் கண்டும் மிரண்டு போயுள்ளதா?
இந்தப் பெகாசஸ் ஒன்று தன் குட்டிகளுக்குப் பாலூட்டிக்கொண்டே
மிரட்சியாக அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தபடி உள்ளது. அருகிலேயே
இன்னும் இரண்டு பெகாசஸ்களும் இப்படியே தலையைத் திருப்பிப்
திருப்பிப் பார்த்தபடி உள்ளன.
முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு தரும் எஸ்கார்டுபோல
நான்கு திசைகளிலும் பார்த்தபடி இருப்பது வியப்பாக உள்ளது.
எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க….
நாய்க்கு வேலையுமில்ல நிற்க நேரமுமில்ல …
ஒருவேளை அப்படித்தான் இந்த பிகாசஸின் குணமோ?
அது அதோட வேலைய மும்முரமா செய்யுது.
நாமளும் பார்த்து ரசித்துவிட்டுப் போவோம்.