பெங்களூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் 30 வயது பெண் ஒருவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி இரவும் வீட்டுக்கு வந்த அந்த பெண் குளிக்க சென்றார். அப்போது திடீரென்று அவரது செல்போன் ஒலித்தது.
செல்போனில் பேசிவிட்டு அவர் குளிக்க பாத்ரூமுக்குள் நுழைந்தபோது வெண்டிலேட்டர் ஜன்னலில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் கத்தினார். இதையடுத்து வீட்டின் அருகே வசிக்கும் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக செல்போனை பிடுங்கி பார்த்தனர். அப்போது அந்த பெண்ணை வீடியோ எடுத்தது உறுதியானது.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மாணவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
