தென்காசி மாவட்டம், வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவன் ஒருவன் சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியுள்ளான்.
தன்னை தலையில் தட்டிய மாணவர் மீது ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன் மறுநாள் புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வந்து அந்த மாணவனை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து அரிவாள் வைத்திருந்த மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.