Friday, August 15, 2025
HTML tutorial

தவெக தலைவர் விஜய்க்கு மாணவர் அமைப்பு கண்டனம்

த.வெ.க., தலைவர் விஜய்க்கு, மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையில், அவ்வமைப்பின் மாநில இணைச்செயலர் விஜயராகவன் கூறியதாவது: அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம், ‘நீட்’ தேர்வு குறித்து எதிர்மறை எண்ணங்கள் புகுத்தி, அரசியல் பேசி மாணவர்கள் இடையே நடிகர் விஜய் வன்முறையை தூண்டுகிறார். ‘நீட்’ தேர்வால் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

அரசியல் காரணங்களுக்காக, ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் விஜய் சேர்ந்து, அரசியல் செய்வதை கண்டிக்கிறோம். உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து, மாணவர்களை தவறாக திசை திருப்புவதை அவர் தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News