அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் பிரவீன் அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில் படித்து வந்துள்ளார். இவர் கடைசியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்தியா வந்து விட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்தநிலையில், பிரவீன் அங்குள்ள ஸ்டோரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள், தெலுங்கானாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை என்றும், பிரதே பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே உண்மை தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள மற்றொரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.