சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரியின் மரணம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு கல்லூரி மாடியில் இருந்து குதித்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.