Wednesday, July 30, 2025

மாப்பிள்ளை டௌரி கொடுத்து மணப்பெண் மொட்டை அடித்தால் தான் கல்யாணம்!

உலக முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள பலதரப்பட்ட கலாச்சாரங்களுக்கேற்ப வித்தியாசமான மற்றும் விநோதமான திருமண சடங்குகள் நடைமுறையில் உள்ளன.

பிரபலமாக அறியப்படும் விக்டோரியா ஏரியின் அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில் பெண் பார்ப்பதில் தொடங்கி திருமணம் வரை நடக்கும் விநோதமான சடங்குகளுக்கு பஞ்சமில்லை.

ஒரு ஆண், தான் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணை பார்த்த உடன் ஓகுரிமா என்ற உளவு பார்க்கும் படலம் தொடங்குகிறது. அதன் பின்னர், ஆணின் குடும்பமும் பெண்ணின் குடும்பமும் கலந்து பேசி, பெண் வீட்டார் சம்மதிக்கும் பட்சத்தில் ஓகுஜுகா என்ற சடங்கு செய்யப்படுகிறது.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தாய் மாமாவுக்கு ஒரு பசுவும், தந்தைக்கு செம்மறி ஆடுகளும் வழங்க வேண்டும்.

இதற்கு பிறகு ஒகுஹிங்கிரா என்கிற விழாவில், திருமணம் அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் நிலையில், மணப்பெண்ணின் தலை மொட்டை அடிக்கப்படும். பின், சகோதரர் மணப்பெண்ணை தோளில் தூக்கி வைத்து சென்று மாப்பிள்ளை வீட்டில் விட வேண்டுமாம்.

அப்போது மணப்பெண் அழுவதும், அவளின் புதிய எஜமானர் என்று குறிக்கும் வகையில் மாப்பிள்ளை ஒரு மரக்கிளையை வைத்து அவள் தலையை தட்டினால் தான் திருமணம் முழுமையாக நடந்து முடிந்ததாக அர்த்தம் எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News