Earplugs வச்ச ஆப்பு! அஞ்சு வருஷமா காதே கேக்கலையாம்…

166
Advertisement

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரியான Wallace Lee, கடந்த ஐந்து வருடங்களாக குறைந்து கொண்டே போகும் தனது கேட்கும் திறனை கவனிக்காமல் இல்லை.

எனினும், 66 வயதான அவருக்கு காது சரியாக கேட்கவில்லை என்றால் பொதுவாக அனைவரும் வயது மூப்பையே காரணமாக கருதுவது வாடிக்கை. Wallaceஉம் முதலில் அதிகமான சத்தம் மிகுந்த சூழலில் பணியாற்றியதே தனது செவித்திறனை பாதித்திருக்கும் என நினைத்து வந்தார்.

ஆனால், அவரே ஒரு சுயபரிசோதனை எண்டோஸ்கோபி (Endoscopy) kitஐ வாங்கி வந்ததால் அவருக்கு விடிவுகாலம் பிறந்தது என்று தான் கூற வேண்டும்.

காதுக்குள் வெள்ளையாக ஏதோ தென்பட, உடனடியாக ENT மருத்துவரை அணுகிய போது தான், அவர் ஐந்து வருடங்களுக்கு முன் விமானப்பயணத்தின் போது பயன்படுத்திய Earplug ஒன்று Wallaceஇன் காதுகளிலேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த Earplugஐ நீக்கிய பின் Wallaceக்கு காதுகள் நன்றாக கேட்கத் தொடங்கியுள்ளது. Earplug, Earbuds போன்றவற்றை பயன்படுத்திய பின் மறக்காமல் அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்தி உள்ளது.