Saturday, December 27, 2025

பீகார் துணை முதல்வர் சென்ற கார் மீது கற்கள் வீசி தாக்குதல்!

பீகார் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

பீகார் துணை முதல்வரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

லக்கிசராய் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு விஜய் குமார் சின்ஹா நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் அவரை ஊருக்குள் நுழைய விடாமல் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும், மாட்டுச் சாணம், கற்கள், காலணிகளை விஜய் குமார் சென்ற காரின் மீது வீசியதுடன், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related News

Latest News