Sunday, December 28, 2025

சிகிச்சை பெற்றும் தீராத வயிற்று வலி : இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகாவை சேர்ந்தவர் சாரதா (வயது 18). சாரதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் வயிற்று வலி குணமாகவில்லை. மேலும் சாரதா அடிக்கடி பேய் பிடித்தது போல கத்துவதும், கோபப்படுவதுமாக இருந்துள்ளார். இதனால் அவரை மதுஸ்ரீ கோவிலுக்கும் அழைத்து சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் தீராத வயிற்று வலியால் விரக்தியில் இருந்த சாரதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News