Saturday, July 5, 2025

“Lord’s-ல் தன் பேரை பதித்த Steve Smith ! கோலிக்கு பிறகு…வரலாற்று சாதனை!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தனது இன்னிங்ஸால் உலக கிரிக்கெட்டையே அதிர வைத்தார்.

தென் ஆப்பிரிக்கா ஃபீல்டிங் தேர்வு செய்ததும், ரபாடா ஆரம்பத்திலேயே கவாஜா மற்றும் க்ரீனை(Cameron Green) வெளியேற்றினார். மார்கோ ஜான்சன் தொடர்ந்து லபுஷேன்(Marnus Labuschagne) மற்றும் ஹெட்டையும் (Travis Head) வீழ்த்தினார். இந்த கடினமான சூழ்நிலையில், ஸ்மித் ஒரு நங்கூரமாய் களம் இறங்கி 111 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார்.

அவரது இந்த இன்னிங்ஸால், லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த non-English வீரராக 99 ஆண்டு பழைய வரலாற்றை முறியடித்து விட்டார். இந்த மைதானத்தில் ஐந்தாவது முறையாக 50 ரன்களைக் கடந்த ஸ்மித், Shivnarine Chanderpaul-க்குப் பிறகு இந்த சாதனை அடைந்த இரண்டாவது வீரர் ஆனார்.

அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த non-English வீரர்களில் Don Bradman-க்குப் பிறகு இரண்டாவது இடத்திலும், Viv Richards-ஐ மிஞ்சி, இங்கிலாந்தில் 18வது முறையாக 50+ ரன்கள் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.

அவரது இந்த பன்முக சாதனைகளை, 2023 WTC Final-இல் இந்தியாவுக்கு எதிராக அடித்த 121 ரன்களும், அதில் தொடர்ச்சியாக சேர்த்த 34 ரன்களும் சேர்த்து, WTC Final-இல் 200 ரன்கள் கடந்த ஒரே வீரராக உருவாக்கின. அதேபோல, WTC Final போட்டிகளில் இரண்டு முறை 50+ அடித்த முதல் வீரரும் ஸ்மித் தான்.

ICC Knockout போட்டிகளில் Virat Kohli-க்குப் பிறகு, 50+ ரன்கள் அடித்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Kumar Sangakkara வின் பின்னால், ICC Final Matches-இல் மூன்று முறை 50+ அடித்த Gilchrist மற்றும் Kohli உடன் இணைந்தார் ஸ்மித்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news