Sunday, June 8, 2025

எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்’ இண்டர்நெட் சேவை பெற மாத கட்டணம் எவ்வளவு?

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக கொடிகட்டி பறக்கும் எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்’ நிறுவனம் செயற்கைகோள் வழியாக இண்டர்நெட் சேவையை நம்நாட்டில் வழங்க மத்திய அரசு உரிமம் வழங்கி உள்ளது.

இந்த இண்டர்நெட் சேவைக்கான பரிசோதனை இன்னும் 15 முதல் 20 நாட்களில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு ‛ஸ்டார்லிங்’ இண்டர்நெட் சேவை வழங்கப்பட்டால் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய முக்கிய தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக ஸ்டார்லிங் நிறுவனம் தனது இண்டர்நெட் சேவையை மக்களிடம் சேர்க்கும் வகையில் வகையில் ‛அன்லிமிடெட் டேட்டா பிளானை மாதம் 10 டாலருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ‛தி எகனாமிக் டைம்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அமலுக்கு வந்தால் மாதம் 857 ரூபாய்க்கு ‛ஸ்டார்லிங்’ இண்டர்நெட் சேவை முதலில் சில மாதங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் ‛ஸ்டார்லிங்’ நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான கட்டணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

தற்போது தான் அறிமுகமாகவுள்ளதால் வரும் நாட்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அதன்பிறகே சரியான கட்டணம் தெரியும். இந்த ‛ஸ்டார்லிங்’ நிறுவனத்தை எடுத்து கொண்டால் 130 நாடுகளுக்கு இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட முக்கிய நாடுகள் இந்த சேவையை பயன்படுத்துகின்றன.

வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் இண்டர்நெட் சேவையை பயன்படுத்த அந்த நாட்டின் கரன்சியின்படி மாதம் 4,200 taka கட்டணமாக செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் ரூ.2,995 கட்டணம் வரும். மேலும் இண்டர்நெட் சேவையை பெறுவதற்கான ‛கிட்’ பெறுவதற்கு ஒருமுறை கட்டணமாக ரூ.47,000 Taka செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.33 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news