தேர்தலுக்காக உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் என கொண்டு வந்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பதற்றத்துடன் இருக்கிறார்கள் என்று கூறினார். அதிமுக- பா.ஜ.க.வும் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் ஸ்டாலின் என்பதெல்லாம் தேர்தலுக்காக தான், ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.