Wednesday, May 21, 2025

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! ‘list’ போட்டாச்சு..யாருக்கெல்லாம் எத்தனை தொகுதி?

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கான சூழ்நிலையை திமுக கட்சி முற்றிலும் சீராக அமைத்து வருகிறது. இப்போது மாநிலத்தை எட்டு மண்டலங்களாக பிரித்து, அந்தந்த பகுதிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ள அமைச்சர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் முக்கியமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நேருவுக்கு மட்டும் 41 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் 2021ல் வென்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவுடன், புதுக்கோட்டை முதல் திருவாரூர் வரை அவருக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடலூரில் மாவட்டச் செயலாளர் இருந்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதி நேருவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஏவா வேலுக்கு 35 தொகுதிகள், அதில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சி பலம் வாய்ந்த பகுதிகள் என்பதாலேயே அவருக்கு கடினமான பணியாக இது அமைந்துள்ளது.

தங்கம் தென்னரசுக்கு தெற்கு மாவட்டங்களை பொறுப்பாக கொடுத்துள்ளனர் – சிவகங்கை, தேனி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் இதில் அடங்கும்.

கொங்கு மண்டலத்தை கவனிக்க செந்தில் பாலாஜிக்கு 35 தொகுதிகள் – கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பார்ப்பு அதிகம், வேலை கடினம்.

ஆர். ராசா சென்னை மாநகரத்தில் உள்ள 16 தொகுதிகளையும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியையும் கவனிக்கிறார். பெரும்பாலான நகர பகுதிகள் என்பதாலே, அதற்கேற்ப திட்டமிட்ட வேலை வேண்டியது அவசியம்.

மாநிலத்தில் தென் பகுதி மக்களை சமாளிக்க கனிமொழிக்கு 22 தொகுதிகள் – தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக மற்றும் அதிமுக தாக்கம் உள்ள பகுதிகள் என்பதால் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

சக்கரபாணிக்கு கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் என மொத்தம் 17 தொகுதிகள்; எம்ஆர் கே. பன்னீர் செல்வத்திற்கு கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என 16 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்பது மட்டுமல்ல, தோல்வி ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் அவர்களுக்கே என்பதையும் திமுக தலைமைத் தொடக்கமாகவே தெரிவித்து விட்டது.

ஜூன் 1க்குள் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, பொதுக்குழுவில் இந்த முடிவுகள் உறுதி செய்யப்பட உள்ளன. தேர்தல் வியூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான குரல் இது!

Latest news