அதிமுக – பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என கூறினார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக நயினார் நாகேந்திரன் பேசியதாவது :”முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும் பொன்முடியையும் தான். என்டிஏ கூட்டணியை அல்ல” என்று தமிழக பாஜக தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்துள்ள நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.