தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது எல்லை தாண்டி சென்றதாக அவ்வப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன. இதில் தமிழக மீனவர்களின் 33 படகுகளை இலங்கை அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது.
இதையடுத்து அங்கு அரசுடைமையாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 30-க்கும் மேற்பட்ட படகுகள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியானதை பார்த்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.