தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், ‘ஹாலோவீன்’ சீசன் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன.
‘ஹாலோவீன்’ சமயத்தில் அங்கு இதுபோல் மாறுவேடங்கள் அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபவது வழக்கம். இதனை போலீஸ் அதிகாரி ஒருவர் பயன்படுத்தி ‘ஸ்பைடர்மேன்’ வேடத்துடன் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டார். பின்னர் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
