Saturday, December 20, 2025

திருமண கோலத்தில் நிற்கும் அம்மாவை நோக்கி நடந்துசென்ற “ஊனமுற்ற குழந்தை”

தாயைவிட விட இவ்வுலகில் எந்த சத்தியும் பெரிதல்ல என்பார்கள்.இதனை இதனை பேர் நேரில் பார்த்ததுண்டு.இணையத்தில் இந்த வீடியோ அம்மா மீதான குழந்தையின் பாசத்தை வெளிப்படுத்தி காண்போரை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில்,பிறப்பிலிருந்து நடக்கமுடியாத குழந்தை ஒன்று தன் அம்மாவின் திருமணத்தில் பங்கேற்க அழகாக உடை அணிந்து,தனக்கென இருக்கும் சக்ரம் பொருத்திய வண்டி உதவியுடன் மகிழ்ச்சியில் உள்ளது.

ஒருகட்டத்தில் மணமக்கள் இருவரும் அலங்காரத்துடன் தங்களை வாழ்தவந்தவர்களின் முன்னே வந்து நிற்க,எதிரே அழகாய் உடை அணிந்து,தன்னால் இயல்பாக நடக்கமுடியவில்லை என்றாலும் தன் அம்மா மனகோலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதை கண்டு சக்ர வண்டியை பிடித்த படி நடந்து வருகிறான் அந்த குழந்தை.

அம்மா மீதான அன்பு மற்றும் தன்னால் முடியும் என்ற தன்னம்பிகையுடன் அம்மாவிற்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதம் பூ கோத்து எடுத்து வந்த தன் குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிடுகின்றனர் மணமக்கள்.

அங்கு சுற்றியுள்ளவர் கண்களில் தண்ணீருடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை படம்பிடித்துள்ளனர்.இந்த வீடியோவை காணும் நெட்டிசன்களையும் இது உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

Related News

Latest News