Wednesday, January 7, 2026

பொங்கலுக்கு சிறப்பு பேருந்து., சொந்த ஊர் செல்வோருக்கு குட் நியூஸ் சொன்ன அரசு

தைப்பொங்கல் வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை நகரத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 22,797 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் தேவையைப் பொறுத்து தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News