Wednesday, July 16, 2025

கடலூர் விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரெயில்வே குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், விபத்துபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் முழு நிதியுதவியுடன் இந்த லெவல் கிராசிங்கிற்கு சுரங்க பாதை (அடிச்சாலை) அமைக்க தெற்கு ரெயில்வே முன்பே ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளது.

இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்காக ரெயில்வே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதுடன், இதற்காக மன்னிப்பும் கோருகிறது என தெரிவித்து உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news