Saturday, December 21, 2024

தென்கொரிய அதிபர் பதவி நீக்கம்…உற்சாகமாக கொண்டாடிய மக்கள்

தென்கொரியாவில் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தலைநகர் சியோலில் உற்சாக குரல் எழுப்பி பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல், கடந்த 3ம் தேதி ராணுவ அவசர நிலையை அறிவித்து, பின்னர் திரும்ப பெற்றார். எனினும் அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு 2வது முறையாக அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அதிபர் யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக் சூ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தலைநகர் சியோலில் உற்சாக குரல் எழுப்பி பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest news