திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (56 வயது). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி கணேசன், பாம்பு கடித்து இறந்ததாக அவரது மகன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தினர். ஆனால் கணசேனின் குடும்பத்தினர் மீது சந்தேகம் வந்துள்ளது.
அதன்பேரில் நடத்திய விசாரணையில், கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக, அவரது மகன்கள் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்சூரன்ஸ் பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து மகன்களே தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
