ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் டேபாசிஷ் நாயக்(வயது 45). அவரது தாய் ஜோத்ஸ்நரனி நாயக்(வயது 65). மது பழக்கத்திற்கு அடிமையான டேபாசிஷ் நாயக், தனது தாயிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது அவரது தாய் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த டேபாசிஷ், தனது தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய டேபாசிஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
