ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், தவெக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஜய், திமுகவை தீய சக்தி என்றும், தவெக தூய சக்தி என்றும் பேசினார்.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள். மக்கள் முடிவுசெய்வார்கள்.” என்று பதிலளித்தார்.
