Saturday, May 24, 2025

இத்தனை நாட்கள் விடுமுறையா? கோடைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு கொத்தாக வரும் விடுமுறை!

“லீவ் விட்டா இங்க போகணும் அங்க போகணும்ன்னு plan போட்டு, எப்போடா இந்த கோடை விடுமுறை ஆரம்பிக்கும்ன்னு ஏங்கி காத்திருந்து, இப்போ கோடை விடுமுறை முடியவே போகிறது.” இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரக்கூடிய பொதுவிடுமுறைகளின் தொகுப்பை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை வரும் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி தமிழகம் முழுவதும் 2025 – 26ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன.

எவ்வளவு தான் நீண்ட விடுமுறையாக இருந்தாலும் அடுத்த Holiday எப்பொழுது என்பதைத் தேடி calendar-ஐ புரட்டும் கைகளே அதிகம். அதன்படி பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே அதாவது ஜூன் 7ம் தேதி பக்ரித் பண்டிகை என்பதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஜூலை 6ம் தேதி மொஹரம் பண்டிகையும், ஆகஸ்ட் மாதம் 15, 16, 27ம் தேதிகள் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை விடப்படும். இவை மட்டுமல்லாமல் செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி பண்டிகைக்காகவும் அக்டோபர் 1 ஆயுத பூஜைக்காகவும் 2ம் தேதி விஜயதசமிக்காகவும் 20ம் தேதி தீபாவளி என்பதாலும் விடுமுறை நாட்கள் வருகின்றன. கடைசியாக டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படும். எனவே கோடை விடுமுறைக்கு பிறகு Holiday Plan போடுபவர்கள் இதை Note செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news