இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவின் திருமணத்தின்போது, அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுக்கு, இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலுடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. திருமண விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைராலி வந்தது.
இந்நிலையில், மந்தனாவின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
