தற்போது உள்ள வீடுகளில் பெரும்பாலும் ஸ்மார்ட் டிவி தான் அதிகம் உள்ளது. சாதாரண டிவியை விட சிறந்த தரத்தில் இருக்கும் இந்த டிவியின் விலை சற்று அதிகம்தான்.
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும்போது செய்யக் கூடாத சில விஷயங்கள் இருக்கிறது.. அதாவது டிவியை சுத்தப்படுத்த விளம்பரங்களின் வரும் ரசாயனங்கள் நிறைந்த லிக்விட்டை பயன்படுத்த கூடாது. ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனில் எந்த இரசாயனங்களும் படக்கூடாது. எந்த ஒரு கடினமான பிரெஷ் அல்லது ஸ்க்ரப் பயன்படுத்தக் கூடாது. இதனால் திரையின் பிரகாசம் குறையும்.
சுத்தம் செய்வதாக நினைத்து தண்ணீரை தெளிக்கக் கூடாது. தண்ணீர் பயன்படுத்தி டிவியை சுத்தம் செய்தால் அது திரையில் ஊடுருவி டிவியை சேதப்படுத்தி விடும்.
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை மட்டுமே பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். கடினமான துணிகளை பயன்படுத்தும்போது, அது திரையில் கீறலை ஏற்படுத்தலாம். நீங்கள் எப்போது டிவியை சுத்தம் செய்தாலும், டிவியின் மின்சார இணைப்பை துண்டித்து, அதோடு அதன் பிளக்கையும் நீக்குவது பாதுகாப்பானது. இதனால் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் அபாயம் இருக்காது.
டிவியின் பக்கங்களிலும் போர்ட்களிலும் தேங்கியிருக்கும் தூசியை அகற்ற ஏர் ப்ளோயரைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால், நீங்கள் வெறும் துணியை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். டிவியின் திரையில் உள்ள கரைகளை அகற்ற, செல்போன் அல்லது லேப்டாப் சுத்தம் செய்ய விற்கப்படும் ஸ்கிரீன் கிளீனரை பயன்படுத்தலாம். இல்லையென்றால், மிகவும் லேசான ஈரப்பதம் இருக்கும் துணியை பயன்படுத்தலாம்.