Sunday, May 11, 2025

அந்த விஷயத்தை தாங்க முடியல….கதறி கதறி அழுதேன்! எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ எனும் வெப் சீரிஸ், டிசம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

அண்மையில் வெளியான இந்த தொடரின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், பல திரை நட்சத்திரங்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா மனதளவில் தான் மிகவும் உடைந்து போன தருணம் பற்றி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

2018ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த இருமொழிப்படமான ‘உயர்ந்த மனிதன்’ 10 நாட்கள் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது.

நாடு தழுவிய சினிமா அரங்கில் அடியெடுத்து வைக்க அந்த வாய்ப்பை பெரிதும் நம்பி இருந்ததாகவும், படம் நிறுத்தப்பட்ட செய்தியை கேட்டு தரையில் புரண்டு கதறி அழுததாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது தவறவிட்ட வாய்ப்புக்கு பதிலாக, இப்போது நடித்துள்ள ‘வதந்தி’ சீரிஸ் தனக்கு உலக சினிமா அரங்கில் அங்கீகாரத்தை பெற்று தரும் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

Latest news