Friday, July 4, 2025

அஜித்குமாரின் உடலில் 50 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு : வெளியான ஷாக் தகவல்

போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 50 காயங்கள், சிகரெட் சூடு, தலை கபாலம் தாக்கப்பட்டு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட பெரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் அஜித்குமாரின் உடலில் 50 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 சிராய்ப்பு காயங்கள், ரத்தக்கட்டுகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலில் 6 இடங்களில் பெரிய காயங்கள் இருந்தன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றின் நடுவே கம்பால் குத்தி கடுமையாக தாக்கி இருந்ததாகவும், தலையில் தாக்கியதால் கபாலத்தினுள் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்கள் சிவந்து வீங்கிய நிலையிலும், காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news