தமிழகத்தில் கடந்த 4-ந் தேதியில் இருந்து எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அதிக பணி நெருக்கடி ஏற்படுவதாக தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.
SIR பணிகளை புறக்கணித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பணிகளை முழுமையாக புறக்கணித்துள்ளனர்.
