Friday, December 26, 2025

SIR பணி புறக்கணிப்பு : சம்பளம் கட்., தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பணிகளை நாளைமுதல் புறக்கணிக்கவுள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் SIR பணிகளை நாளை புறக்கணித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மருத்துவ காரணங்கள் நீங்கலாக வேறு எந்த விடுப்பையும் நாளை எடுக்க கூடாது என தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

Latest News