தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (SIR) ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையில் தொடர் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை பதிவேற்ற முயற்சிக்கும்போது, வலைத்தளம் மெதுவாக இயங்குதல், திடீர் லாக் அவுட்கள், ஸ்கிரீன் முடங்குதல் மற்றும் மீண்டும் மீண்டும் ஹேங்க் ஆகுதல் போன்ற பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். சில நேரங்களில் வலைத்தளம் செயலிழந்து போவதால் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
சரியான நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், தங்கள் பெயர்கள் நீக்கப்படலாம் அல்லது தவறாகப் புதுப்பிக்கப்படலாம் என வாக்காளர்கள் கவலைப்படுகின்றனர். இந்த தொழில்நுட்ப சிக்கல்கள், அவர்களின் எதிர்கால வாக்களிக்கும் உரிமைகளை பாதிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளன.
