வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளின் ஒரு பகுதியாக 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரேதங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை வெளியிட்டது.
இதில், மேற்கு வங்கத்தில் 58 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் 24 லட்சம் பேர், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் பேர், போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் என 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
