காஷ்மீரில் நடைபெற்ற பஹல்ஹாம் தாக்குதலுக்கு, Sindoor Operation மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டியுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் தற்போது முழுவீச்சில் இந்தியா போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகிறது. ‘வெள்ளைக்கொடி’ காட்டி பாகிஸ்தான் சமாதானம் செய்ய முன்வந்தாலும் கூட, இந்தியா இன்னும் உக்கிர மோடில் தான் உள்ளது.
எனவே இந்தியா – பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம், என்ற அச்சம் இருநாட்டு மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் Sindoor Operation காரணமாக, IPL போட்டிகளுக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தானுடன் மிகப்பெரிய அளவில் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதனால் அங்குள்ள தரம்சாலா மைதானத்தில் IPL போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடப்பட்டு வருவதால், வீரர்கள் தரம்சாலாவிற்கு செல்ல சிரமப்படலாம்.
பாதுகாப்பு மற்றும் பயணம் செய்வதில் சிக்கல் ஆகிய காரணங்களால் பஞ்சாப்- டெல்லி, மும்பை – பஞ்சாப் என, தரம்சாலாவில் அடுத்து நடைபெறும் 2 போட்டிகளும் வேறு மைதானத்திற்கு மாற்றி வைக்கப்படலாம். இதற்கிடையில் IPL போட்டிகளை அங்கு நடத்தலாமா? வேண்டாமா? என, மத்திய அரசிடம் BCCI அனுமதி கேட்டுள்ளதாம்.
மத்திய அரசு சொல்லும் பதிலை வைத்தே, IPL போட்டிகள் திட்டமிட்டபடி தரம்சாலா மைதானத்தில் நடைபெறுமா? இல்லை வேறு மைதானத்திற்கு மாற்றி வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.