Tuesday, August 19, 2025
HTML tutorial

நைட் நிம்மதியா தூங்க இந்த டிப்ஸ Follow பண்ணுங்க

உடல் உறுப்புகளை முறையாக இயங்க வைக்க, பொதுவான உடல் மற்றும் மன நலனை உறுதி செய்வதற்கு நல்ல தூக்கம் அவசியம். ஆனால் வேலைப்பளு, எந்திரமயமான வாழ்க்கை, மன உளைச்சல் என பலரும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு பின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

குறைந்தது 10 மணிக்கு படுக்கைக்கு போக முயற்சிக்க வேண்டும். தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே டிவி, மொபைல் போன்ற மின்சாதனங்களை அணைத்துவிட வேண்டும்.

படுக்கும் அறையில் விளக்குகளை அணைப்பது மற்றும் கனமான போர்வையை உபயோகிப்பது உறங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். எள்ளெண்ணையை மிதமாக சூடேற்றி கால்களில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் விரைவாக தூக்கம் வர வழி வகுக்கும்.

மேலும், இரவு உணவிற்கு பின் வெதுவெதுப்பான பாலில் ஜாதிக்காய் பொடி அல்லது மஞ்சள் தூள் சேர்த்து பருகுவது தூக்கமின்மைக்கு எளிய தீர்வாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News