தோட்டங்கள் உடைய வீடுகள் மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு அடிக்கடி பாம்புகள் வருவது வழக்கம்.
எனினும், பல பாம்புகளுக்கு விஷத் தன்மை இருக்குமென்பதால் அவற்றை அலட்சியம் செய்ய கூடாது.
எலுமிச்சை புல் என அழைக்கப்படும் Lemon Grass வீட்டிற்கு அருகில் நட்டு வைத்தால் பாம்பு மட்டுமின்றி தவளை, கரப்பான் பூச்சி போன்றவற்றின் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
பூண்டு மற்றும் வெங்காயத்தில் sulphate நிறைந்திருப்பதால் அவை சிறந்த பாம்பு விரட்டியாக செயல்படுகின்றன.
பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து தண்ணீருடன் கலந்து அதை பாம்பு நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் தெளிப்பதன் மூலம் பாம்பு வருவதை தடுக்கலாம்.
இயற்கையான பாம்பு விரட்டியாகிய Snake Plant என அழைக்கப்படும் பாம்பு கற்றாழையை வீட்டை சுற்றி நட்டு வைப்பது சிறப்பான பலன்களை தரும். கிராம்பு எண்ணெயை பாம்பு வெளியில் இருந்து உள்ளே வரக்கூடிய ஜன்னல் மற்றும் கதவுகளில் தெளிப்பது பயன் தரும்.
வீட்டை சுற்றி தேங்கி இருக்கும் தண்ணீரில் வினிகர் தெளித்து வந்தால் நீர்நிலை பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கோழி, வாத்து போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள் வீட்டிற்கும் அதன் கூண்டுகளுக்கும் தேவையான இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டை சுற்றி இருக்கும் புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்றுவது பாம்புகளின் நடமாட்டத்தை குறைக்க உதவும்.
தோட்டத்தில் இருந்து பாம்புகள் வீட்டிற்கு நுழைய ஏதுவாக இருக்கும் வழிகளை கண்டறிந்து அடைப்பது முழுமையான தீர்வுக்கு வழி வகுக்கும்.