முக அழகை கெடுப்பதில் முகப்பருக்கள் முன்னணி இடம் வகித்தாலும், அதற்கும் ஒரு படி மேலே சென்று இம்சை கொடுக்கும் பட்டியலில் கரும்புள்ளிகள் கட்டாயம் இருக்கும்.
வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு Face pack மூலம் அதை சரி செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
அரிசி மாவு, தேன் மற்றும் டீத் தூளை சம அளவில் எடுத்து, அவற்றை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
முகத்தை ஈரம் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு தயார் செய்த பசையை தடவி 20 நிமிடங்கள் வரை உலர விட்டு கழுவினால் சிறப்பான மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்.
வாரம் இரு முறை செய்து வரும் பட்சத்தில் கரும்புள்ளிகள் படிப்படியாக மறைவதை காண முடியும்.
சருமத்தின் pH அளவை சீராக்கும் தன்மை கொண்ட அரிசி மாவு, சருமத்தின் இயற்கை நிறத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
தேன் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து, சரும வறட்சியை நீக்கி புதுப் பொலிவை அளிக்கிறது.
இதனுடன் சேர்த்து, சருமத் துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் டீத்தூள் இணைந்து செயல்படுவதால் பொதுவான சரும ஆரோக்கியமும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.