சாப்பாட்டில் உப்பு அதிகமாகிடுச்சா? இத செஞ்சா சரி ஆகிடும்

302
Advertisement

சமையலில் சரியான அளவில் உப்பு போடவில்லை என்றால் உணவின் சுவை மொத்தமாக கெட்டு விடும். அப்படியே அதிகம் ஆகிவிட்டால், அதை சுலபமாக எப்படி சரி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

உப்பு அதிகமான குழம்பில் உருளைக்கிழங்கை வெட்டி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விட்டால் உப்புத் தன்மை குறைந்து விடும்.

இரண்டு தக்காளிகளை நறுக்கி போட்டும் பத்து நிமிடம் கொதிக்க வைத்தால் குழம்பில் உப்பு குறைவதோடு சுவையும் அதிகரிக்கும். சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ குழம்புகளில் உப்பு அதிகமாகி விட்டால் தேங்காய் பால் ஊற்றினால் உப்பு குறையும். இந்த பொருட்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் சற்றே தண்ணீர் சேர்த்து மசாலா பொடியை சேர்த்து குழம்பை கொதிக்க விட்டாலே உப்பு சுவையை குறைக்க முடியும்.

குருமா வகை குழம்புகளில் உப்பு அதிகமாகி விட்டால் சோள மாவு அல்லது கடலை மாவை தண்ணீரில் கரைத்து குழம்புடன் சேர்த்து விட்டால் உப்பு சுவை சீராவதோடு குழம்பின் சுவையும் மேம்படும்.

பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் இரண்டு வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி சேர்ப்பது, தேங்காய் துருவல் சேர்ப்பது, உடைத்த வேர்க்கடலை சேர்ப்பது என ஏதேனும் ஒன்றை செய்தால் உப்பு சுவையை குறைத்து விடலாம். சமைக்கப்படும் உணவின் வகைக்கு ஏற்றவாறு மேற்குறிப்பிட்ட முறைகளை கையாண்டு அதிகமான உப்பு உப்பை எளிய முறைகளில் குறைக்கலாம்.