குளிர்கால நோய் எதிர்ப்பு சக்திக்கு குடிக்க வேண்டிய 7 தேநீர் வகைகள்!

254
Advertisement

பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், குளிர்காலமும் அருகில் வந்து விட்டது. பருவ கால மாற்றத்தினால், பலருக்கும் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படுவது இயல்பு.

மழை மற்றும் குளிர் கால நோய்த் தொற்றுக்களை தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். இவற்றை சமாளிக்க சில எளிய இயற்கை தேநீர் வகைகளை குடித்தாலே சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

புதினாவும் இஞ்சியும் சேர்த்த தேநீர் பருகுவதால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து, மன அழுத்தம் குறைவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும். மிளகும் எலுமிச்சையும் சேர்த்த தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, மூட்டு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

அஸ்வகந்தா தேநீர், உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தி, இரத்த சக்கரை அளவுகளை சீராக்கி, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. துளசி தேநீர் உடலில் நோய் ஏற்படுத்த கூடிய கிருமிகளுடன் போராடி, சரும பளபளப்பையும் கூட்டுகிறது.

ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ், கிருமி நாசினி மற்றும் அழற்சி நீக்கும் தன்மைகளை இயல்பாகவே கொண்டிருக்கும் மஞ்சள் தேநீரை குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் நோய் பாதிப்பு வருவதை தவிர்க்கலாம். இஞ்சியும் அதிமதுரமும் சேர்த்த தேநீர் சளி, இருமல் விரைவில் குணமாக உதவுவதோடு இருமலால் ஏற்படும் தொண்டை வலிக்கும் ஆறுதலாக அமைகிறது.

உடல் சோர்வு மற்றும் தசை வலியை போக்கும் கேமோமைல் (Chamomile) தேநீர் உடல் நலம் குன்றியவர்கள் அருந்த சிறந்த பானமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற எளிய தேநீர் வகைகளை அருந்தி, மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.