கடந்த 2021ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சர்புதீன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.27 லட்சம் பணம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தயாரிப்பாளர் சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பார்ட்டில் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்களுக்கு பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
